26th Sunday and St. Lucy...

 

26th Sunday – 26th September, 2022

Am 6:1,4-7; 1Tim 6:11-16; Lk 16:19-31

-   വ്യര്‍ഥമായ സുരക്ഷിതത്വം അനുഭവിക്കുന്നവര്‍ പ്രവാസികളാകേണ്ടിവരിക...

-   ...പ്രമാണങ്ങളെല്ലാം നിഷ്കളങ്കമായും അന്യൂനമായും കാത്തുസൂക്ഷിക്കുക...

-   ധനവാനും ലാസറും... ‘ജീവിതകാലത്ത്, നിനക്കു എല്ലാ സുഖങ്ങളും ലഭിച്ചിരുന്നു... ലാസറിനോ കഷ്ടതകളും... ഇപ്പോള്‍ അവന്‍ ഇവിടെ ആനന്ദിക്കുകയും നീ വേദന അനുഭവിക്കയും ചെയ്യുന്നു... മോശയും പ്രവാചകന്മാരും...

o    പ്രവാസി-അഭയാര്‍ഥി ദിനം...

പ്രവാസം ആഗ്രഹിക്കുന്ന ഒന്നല്ല, മറിച്ച് ഒഴിവാക്കാന് പറ്റാതെ ഏറ്റെടുക്കേണ്ടി വരുന്നതാണ്, ജീവിക്കാന് വേണ്ടി...

യാത്രകള്‍ എക്കാലവും മനുഷ്യര്‍ ഇഷ്ടപ്പെട്ടിട്ടുണ്ടാവണം, എന്നാല്‍ പ്രവാസം അങ്ങനെയല്ല, അത് ഏറ്റെടുക്കേണ്ടി വരുന്നതാണ്...

ജീവിതാവസ്ഥകള്‍ മാറി മറിയുന്നതാണ്, അതാണ്‌ ഇന്നത്തെ ആദ്യത്തെ വായനയായ ആമോസിന്‍റെ പുസ്തക ഭാഗവും, ലൂക്കായുടെ ധനവാന്റെയും ലാസറിന്റെയും ഉപമയും സൂചിപ്പിക്കുന്നത്... ഈ കഴിഞ്ഞ ദിവസങ്ങളിലെ സഭാ പ്രസംഗകന്‍റെ പുസ്തകത്തിലെ വായനകളും, ‘എല്ലാറ്റിനുമുണ്ട് ഓരോ സമയം...’

ഭോഷനായ ധനികന്‍: വേണ്ട വിഭവങ്ങള്‍ സംഭരിച്ച്, വിശ്രമിക്കാനും തിന്നുകുടിച്ചു ആനന്ദിക്കാനും തയ്യാറാകുന്നവരുടെ ജീവന്‍ എടുക്കപ്പെടുമ്പോള്‍ ഒരുക്കിവച്ചവ ആരുടെതാകും? (Lk 12:13-21).

നമ്മുടെ രൂപതയില്‍, മര്യനാട് ഒരു ഉദാഹരണമാണ്, കൂടാതെ, കൊല്ലത്ത് മൂതാക്കര തുടങ്ങിയ സ്ഥലങ്ങള്‍... കേരളത്തില്‍ മലബാര്‍ കുടിയേറ്റം,

 

 

 

“குடும்பம், திருச்சபை மற்றும் அரசியல்/அரசு தலைவர்களின் முன்மதிக்கு (விவேகம்,ஜாக்கிரதை) எடுத்துக்காட்டாகும் புனித கண்ணம்மாள்” (மத்தேயு 21:23-27)

திருப்புகழ் - மாலை ஆராதனை

[சிறப்பிப்போர்: அனைத்து மீனவர், வள்ளம் யூணியன் மற்றும் தலைச்சுமடு பெண்கள்]

விண்ணரசின் வருகையை முன்னறிவித்த, இறையன்பை விளக்கும், வழிதவறியவர்க்கு வழிகாட்டும், சோர்ந்த உள்ளங்களுக்கு இளைப்பாறுதல் அளிக்கும், மரியன்னைக்கு பிரியமான, இறை ஞானத்தோடு மெய்யானவற்றை கற்பித்த, இறைவனின் தோற்றத்தை புரிந்து தனதாக்கிய, இயேசுவை தனதாக்கிய மற்றும்...

இரயுமன்துறை – 12.12.2022

 

பிறந்த மண்ணில் போதனை! சோதனையான, ஒரு நிலை இது, குறிப்பாக, இன்றைக்கு முன் அருளுரை வழங்கிய அத்தனை அருட்பணியாளர்களும், தமிழ் மொழியிலேயே பணியாற்றுபவர்கள். நானோ, பதினொன்று வருடம் பள்ளியில் பயின்றது தமிழ் எனினும், பிறகு குருமடம் துவங்கி கல்லூரிகளிலும் மற்றும் பயின்றதும் இன்றுவரை பணியாற்றுவதும் மலையாள மொழியிலேயே. எனவே, தாய் மொழி, உணர்வின் மொழி தமிழானபோதும், வேதாகமம், இறையியல் இன்னபிற விஷயங்கள் பயின்றதும் பயன்படுத்தியதும் அந்த மொழியிலாதலால் தமிழுக்கு அங்கங்கே வேகத்தடைகள் வரலாம், குறிப்பாக உரிய வார்த்தைகள் கிடைப்பதில்... சரளமாக பேச அதுவே தடைகளாகலாம்... இத்தனையும் தாண்டி இன்றைய கருத்தை எந்த அளவு உங்களுக்கு அறிமுகம் செய்து விளக்குவேன் என்ற உறுதியும் போதாது... ஆக, என்னுடைய மறையுரை உங்கள் கவனத்தை (கலைக்காத) ஈர்க்கும் அளவுக்கு ஏற்புடையனதாக, அழகாக இருக்குமா என்பதும் எனது ஆதங்கமே. இருந்தாலும் முயல்கிறேன்...  [இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார்... அவரது அருள்மொழியை கேட்டு, ‘இவர் யோசேப்பின் மகனல்லவா...’ ‘இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை...’ (லூக்கா 4:16-24)]

இன்றைய நற்செய்தி இயேசுவினுடைய அதிகாரம் பற்றியது. அதை பார்ப்போம் முதலில், தொடர்ந்து நமது பாதுகாவலியின் முன்மதியையும்...

எந்த அதிகாரத்தால் இவற்றை செய்கிறீர்? இந்த அதிகாரத்தை கொடுத்தவர் யார்?" என்று தலைமைக் குருக்களும் மூப்பர்களும் கேட்கின்றனர். (Mt 21:23)

-           இயேசுவினது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.’ (7:28-29)

-           அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். (Lk 4:32)

-           எல்லாரும் திகைப்படைந்து, ‘எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்...’(4:36)

-           ‘நானே உலகின் ஒளி’ என்ற அவரே ‘நீங்கள் உலகின் ஒளியாயிருக்கிறீர்கள்’ என்றும் சொல்லித்தந்தார்! அப்படிப்பட்ட அவர் ஏன், சீடர்களிடம்,

o    *** “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது...ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கு...வந்தார்.” (Mk 10:42, 43 & 45)

-           இந்த பின்புலத்தில்தான், இயேசுவின் அதிகாரம் பற்றிய மனதை நாம் புரிந்துகொள்வது அவசியம்...

-           அதிகாரம் என்பதற்கு ஆங்கில அகராதியில், விவிலியத்திலும் Authority என மொழிமாற்றம் தந்திருக்கிறார்கள். அதற்கு நம்பகத்தன்மை (பொதுவாக ஒரு சர்ச்சையைத் தீர்ப்பதற்கு நம்பகமான தகவல்கள் அல்லது ஆதாரங்களை வழங்கக்கூடிய ஒரு புத்தகம் அல்லது பிற மூலங்கள்), தனிப்பட்ட நிபுணத்துவத்தின் விளைவாக ஏற்படும் நம்பிக்கை, ஒரு விஷயத்தைப் பற்றி விரிவான அல்லது சிறப்பு அறிவு கொண்ட நபர், அதாவது ஒரு நிபுணன், மற்றும் குணநலத்தால் வாய்க்கும் அதிகாரம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.

-           Authority -யை விட சரியான வார்த்தை authentic என்று நினைக்கிறேன். இதற்கு நம்பத்தகுந்த (credible, authentic, creditable, credent, responsible), நிஜமான (virtual, authentic), போலியல்லாத* (authentic), துல்லியம் மற்றும் வழுவாத நுண்ணியம், நம்பத்தகுந்த, நிஜமான போலியல்லாத உண்மையான, மற்றும் நேர்மையான என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.

-           அவரது போதனை, மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்துடனானது... இது என்ன! அதிகாரம் கொண்ட புதிய போதனை...'(Mk 1:22, 27).

-           இது உடல் வலிமையல்ல, படை பலமல்ல, பதவிபாலமும் அல்ல, மாறாக உள்ள பலம், ஆன்ம பலம், அதாவது, நம்பகத்தன்மையுடைய, போலியல்லாத ஆளுமை... இது அதிகாரமல்ல, ஆணவமல்ல, பதவிப் பெருமையல்ல... யாரையும், எந்த அமைப்பையும் சார்ந்ததுமல்ல... சாதாரண மக்களுக்கு அறிமுகமல்லாத, வெளிப்படையான காரணங்கள் இல்லாத ஓன்று இது! இது மேலிருந்து வருவது, உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருவது, உண்மையினின்று வருவது.

o    ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம் – மாந்தர்க்கு/ உள்ளத்தனைய உயர்வு.”

 

குடும்பம் மற்றும் திருச்சபைக்கு அந்தந்த அமைப்பிலேயே உள்ளது அதிகாரம்...

அரசு, மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மக்களிடமிருந்து கிடைக்கிறது, குறிப்பாக மக்களாட்சியில், அதையும் வரையறுத்திருக்கிறார்கள், அரசியல் சாசனம் மற்றும் சட்டங்களால்... மக்கள் பிரதிநிதிகட்கும், அரசு அதிகாரிகளுக்கும் அவரவர் பதவிக்கு சேர்ந்த அதிகாரம் உண்டு, வரையறைகளும்...

 

மற்றபடி தனி நபர்களும் அதிகாரம் செலுத்துவதுண்டு, அது யாரும் கொடுத்ததல்ல, மாறாக அவர்களது ஆளுமையால், அதாவது உண்மை, நேர்மை, நீதி, நியாயம், அனைத்திற்கும் மேலாக தன்னலம் கொஞ்சமும் இல்லாமல் பிறர்நலம் மட்டும் பேணி தியாக வாழ்க்கை வாழ்வதனால்... எனவேதான்

 

'இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன்... உங்களை நான் நண்பர்கள் என்றேன்.' (யோவான் 15:15) 'நீங்கள் என்னைப் 'போதகர்' என்றும் 'ஆண்டவர்' என்றும் அழைக்கிறீர்கள்.... (அது) முறையே... நான் உங்கள் காலடிகளை கழுவினேன் என்றால் நீங்களும்... (அப்படி செய்ய) கடமைப்பட்டிருக்கிறீர்கள்... (13:12-15).

 

இந்த தியாக வாழ்வே, துல்லியம் மற்றும் வழுவாத நுண்ணியம், நம்பத்தகுந்த, நிஜமான போலியல்லாத உண்மையான, மற்றும் நேர்மையான வாழ்வே நமது பாதுகாவலி லூசியாவையும் முன்மதியுள்ள, அதிகாரமுள்ள ஆளுமையாக, புனிதையாக உயர்த்தியது...

அரசியலில், அரசுகளில், ஏன் திருச்சபையிலும் இரத்த உறவுகளிலிருந்து தோன்றும் நமது குடும்பங்களிலும் இந்த முன்மதி, துல்லியம் மற்றும் வழுவாத நுண்ணியம், நம்பத்தகுந்த, நிஜமான போலியல்லாத உண்மையான, மற்றும் நேர்மையான வாழ்வின் குறையே அங்கே காணக்கிடக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் எனலாம்...

 

St. Lucy:

(இறப்பு: 304 சிசிலி நாட்டின் சிறாக்கூசில்)

உரோமை பேரரசன் டையக்ளீஷ்யன் கட்டவிழ்த்த மத நிந்தை மற்றும் சித்திர வதைகளுக்கு இரையானவள்... இவளது பிரசித்தி - கி. பி 400 காலத்தில் ஜெப புத்தகங்களிலும் மற்றும் இவளைப் பற்றிய விவரங்கள் காணக்கிடக்கின்றது. மேலும் எட்டாவது நூற்றாண்டுக்கு முன்னமே பெரும்பான்மைகிறிஸ்தவர்களல்லாத இங்கிலாந்து நாட்டில் இவள் பெயரால் இரண்டு தேவாலயங்களும் இருந்ததாக சான்றுகள் உள்ளன.

 

செல்வ குடும்பத்தில் பிறந்த இவள் புனித ஆகத்தம்மாள் பாரம்பரியப்படி கன்னிமைக்கு தன்னையே அர்ப்பணித்தவளாதலால், அவளை மணம் செய்ய விரும்பிய இளைஞனை தவிர்க்க, இவள் கிறிஸ்தவள் என்ற தகவலை உரோமை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த அவளை சித்திரவதை செய்து கண்களையும் பிடுங்கி கொலை செய்தார்கள்... (திருமணம் தவிர்க்க தானாக கண்களை பிடுங்கியதாகவும் சொல்கிறார்கள்).

 

 

 

 

பங்கிறாஸ் அருளப்பன்/12.12.2022

 

 

 

 

Comments

Popular posts from this blog

യേശുവിന്റെ ദൈവരാജ്യ/ സുവിശേഷ അനിവാര്യതകൾ... 17.06.2025

'സ്നേഹം ഒരിക്കലും അവസാനിക്കുന്നില്ല' 14.06.2025

പൗലോസിന്റെ മാനസാന്തര...