நம்பிக்கை நம்மை விழிப்படைய/ ஆயத்தமடைய செய்யும்...

 நம்பிக்கை நம்மை விழிப்படைய/ ஆயத்தமடைய செய்யும்...

'പ്രത്യാശ നമ്മെ ജാഗരൂകരാക്കും...'

തൈക്കാട് - ഞായർ 10.8.25 @ വൈകുന്നേരം 6 മണി 


['വിശ്വാസം, പ്രത്യാശ, സ്നേഹം = நம்பிக்கை, எதிர்நோக்கு (நம்பிக்கை, ஆசை), அன்பு Alert = எச்சரிக்கை, உஷார், விழிப்பு, கவனம், காவல், ஆயத்தம்...]

தமிழ், தாய்மொழிக்கு மேல் உணர்ச்சி மொழி என்றிருந்தாலும், பேச்சுமொழி அரை நூற்றாண்டுக்கும் மேலாக மலையாளமாக  இருப்பதால், தமிழில் ஓரளவு உரையாட முடியுமே தவிர சரளமாக பேச, மறையுரை ஆற்றுவது எளிதல்ல.

சரி, ஏன் இப்போது இப்படி ஒரு ஏற்பாடு! இந்த பங்கிலுள்ள மூத்த குடியினர் தமிழர் என்பதாலா!! 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற தமிழினமே 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றும் சொல்லியிருக்கிறது.

ஆக, நாம் இவர்களுடைய மொழி, கலாச்சாரம் போன்றவற்றையும் நம்முடையதாக்கியிருக்கிறோம். இருந்தும் நமது தாய் மொழியில் திருப்பலியும் மறையுரையும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

ஆக, என்னால் இயன்றவரை முயற்சிக்கிறேன், மீதி உங்கள் புரிதல் மற்றும் பெருந்தன்மையே...

இனி, விஷயத்திற்கு வருவோம்.

நம்பிக்கை/எதிர்நோக்கு நம்மை விழிப்புடையோராக்கும்/ ஆயத்தமு டையோரக்கும்... [19-ஆம் ஞாயிறு 10.8.25]

Lk 12:32-48 - 'ஆயத்தமாயிருங்கள், ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.

- காவலயிருங்கள், கவனமாயிருங்கள்

'தம் ஊழியருக்கு வேளாவேளை படிய ளக்க அமர்த்தப்பட்ட வீட்டு பொறுப்பாளர்

'நான் என்ன, என் சகோதரனுக்கு காவலாளியோ? (Gen 4:9)

- அயலான்/ அடுத்திருப்பவன்...

- இரக்கம் காட்டியவர் (Lk 10:25-37)

- 'மிகச் சிறியோரா கிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை/ செய்யாததையெல் லாம் எனக்கே செய் தீர்கள்...' Mt 25:31-45

- 'யானைக்கு பலம் தும்பிக்கையில், நமக்கு நம்பிக்கையில்'

- 'நம்பினார் கெடுவதில்லை', நான்குமறை தீர்ப்பு.

- நம்பிக்கை நட்சத்திரம்

நமது சக்தி, பலம் அபாரமானது, அளவில்லாதது, எல்லையில்லாதது...

- 'வானமே எல்லை', அதாவது'எல்லையே இல்லை'...

நம்மால் இயலாதது ஒன்றுமில்லை, அதாவது நாம் நினைத்தால், துணிந்தால் முடியாதது எதுவுமில்லை...

- 'துணிந்தவனுக்கு தூக்குமேடை கூட பஞ்சு மெத்தையாம்.'

- நினைத்ததை முடிப்பவன் நான்...

- 'துணிவே துணை'

'பறவையை கண்டான் விமானம் படைத்தான்/

பாயும் மீன்களில் படகினை கண்டான்/

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்...'

அனைத்தும் துணிவால் தான், நம்பிக்கையால் தான்.


ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே/

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.//

ஒவ்வொரு விடியலுமேசொல்கிறதே/

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே..

 

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்/

லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் /

மனமே மனமே நீ மாறிவிடு//

மலையோ அது பனியோ நீ மோதி விடு./

 

உள்ளம் என்றும் எப்போதும்

உடைந்து போகக் கூடாது./

என்ன இந்த வாழ்கையென்ற

எண்ணம் தோன்றக் கூடாது/

எந்த மனிதன் நெஞ்சுக்குள்

காயம் இல்லை சொல்லுங்கள்/

காலப்போக்கில் காயமெல்லாம்

மறைந்து போகும் மாயங்கள்//

 

உளி தாங்கும் கற்கள் தானே

மண்மீது சிலையாகும்/

வலி தாங்கும் உள்ளம் தானே

நிலையான சுகம் காணும்//

 

யாருக்கில்லை போராட்டம்

கண்ணில் என்ன நீரோட்டம்/

ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்/                                   

ஒரு நாளில் நிஜமாகும்

 

*வாழ்க்கை கவிதை வாசிப்போம்/

வானம் அளவு யோசிப்போம்/

முயற்சி என்ற ஒன்றை மட்டும்/     

மூச்சுபோல சுவாசிப் போம்*                        

 

லட்சம் கனவு கண்ணோடு/

லட்சியங்கள் நெஞ்சோடு./

உன்னை வெல்ல யாருமில்லை/                                                     

உறுதியோடு போராடு

 

மனிதா.. உன் மனதை கீறி

விதை போடு மரமாகும்

அவமானம் படுதோல்வி

எல்லாமே உரமாகும்

 

தோல்வியின்றி வரலாறா

துக்கம் என்ன என் தோழா

ஒரு முடிவிருந்தால்

அதில் தெளிவிருந்தால்

அந்த வானம் வசமாகும்

மனமே மனமே நீ மாறிவிடு.

மலையோ அது பனியோ நீ மோதி விடு.

[பாடலாசிரியர்: பா. விஜய்/பாடகர்:         கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர்: பரத்வாஜ்/ திரைப்படம்: ஆட்டோகிராப்]

 

தூங்காதே தம்பி தூங்காதே

நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்

பல சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும் (2)

 

சக்தி இருந்தால்

உனைக்கண்டு சிரிக்கும் (2)

சத்திரம்தான் உனக்கு

இடம் கொடுக்கும்

 

நல்ல பொழுதையெல்லாம்

தூங்கி கெடுத்தவர்கள்

நாட்டை கெடுத்ததுடன்

தானும்கெட்டார் (2)

 

சிலர் அல்லும் பகலும்

தெரு கல்லாய் இருந்து விட்டு

அதிர்ஷ்டம் இல்லை

என்று அலட்டிக்கொண்டார்

 

விழித்துக்கொண்டோரெல்லாம்

பிழைத்துக் கொண்டார்-உன்போல்

குறட்டை விட்டோரெல்லாம்

கோட்டைவிட்டார்

 

போர் படைதனில் தூங்கியவன்

வெற்றி இழந்தான் (2)

உயர்பள்ளியில் தூங்கியவன்

கல்வி இழந்தான்

 

கடைதனில் தூங்கியவன்

முதலிழந்தான்

கொண்ட கடமையில் தூங்கியவன்

புகழ் இழந்தான்..

 

இன்னும் பொறுப்புள்ள

மனிதரின் தூக்கத்தினால்

பலபொன்னான வேலையெல்லாம்

தூங்குதப்பா

[ஆசிரியர்: புதுக்கோட்டை கல்யாண சுந்தரம்/ பாடகர்: TMS

இசை: SM சுப்பையா நாயுடு/ படம்: நாடோடி மன்னன்]


Comments

Popular posts from this blog

യേശുവിന്റെ ദൈവരാജ്യ/ സുവിശേഷ അനിവാര്യതകൾ... 17.06.2025

'സ്നേഹം ഒരിക്കലും അവസാനിക്കുന്നില്ല' 14.06.2025

പൗലോസിന്റെ മാനസാന്തര...